Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களின் கருப்புப்பணம்: முதல் பட்டியலை அளித்தது சுவிஸ் வங்கி!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (20:47 IST)
சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப்பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அந்த வகையில் சுவிஸ் வங்க்யில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் குறித்த பட்டியலை பெற தொடர்ந்து மத்திய அரசு முயற்சித்து வந்தது

இந்த நிலையில் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, சுவிட்சர்லாந்து வரி நிர்வாக அமைப்பான FTA இந்தியர்களின் கருப்புப்பணம் குறித்த தகவல்களை அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இந்த பட்டியல் மூலம் அதனை கண்டறிய முடியும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில், தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் கணக்குகள் மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு முன்பாக மூடப்பட்ட கணக்குகள் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த பட்டியலி வெளியிட்டால் மட்டுமே சாமானிய மக்களால் கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள் யார் யார்? தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments