Webdunia - Bharat's app for daily news and videos

Install App

KFC, பீட்சா ஹட் சேவை ரஷ்யாவில் நிறுத்தம்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (13:57 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் அதை கண்டிக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வருகின்றன.

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
 
மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.
 
இதனைத்தொடர்ந்து பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. கூல்ட்ரிங்க்ஸ் நிறுவனமான கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
 
மேலும் தற்போது KFC, பீட்சா ஹட் நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் எப்போது?

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments