Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளுடீக் விவகாரத்தால் ஒரே நாளில் ரூ.12,000 கோடி நஷ்டம்: அதிர்ச்சியில் எலான் மஸ்க்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (18:50 IST)
8 டாலர் கொடுத்தால் புளுடீக் கிடைக்கும் என்று டுவிட்டர் நிறுவனத்தின் அறிவிப்பு காரணமாக முன்னணி நிறுவனம் ஒன்று ஒரே நாளில் 12 ஆயிரம் கோடியை இழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், புளுடீக் பயனாளிகள் 8 டாலர் கட்டணம் கட்டவேண்டும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி 8 டாலர் கொடுத்தால் எந்த விதமான ஆவண சரிபார்ப்பு மின்றி புளுடீக் வசதி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
இதனை அடுத்து பல போலி கணக்கு வைத்திருப்பவர்களை 8 டாலர் கொடுத்து புளுடீக்  வசதியை பெற்று வந்தனர். இந்த நிலையில் உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனத்தின் போலி டுவிட்டர் கணக்கிற்கு புளுடீக் கொடுக்கப்பட்டதை அடுத்து அந்த டுவிட்டர் கணக்கில் இன்சுலின் மருந்து இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மளமளவென இறங்கி ஒரே நாளில் 15 பில்லியன் நஷ்டமானது. இது இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து புளுடீக் திட்டத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments