Daily Horoscope
✕

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடம்?!.. மக்கள் சோகம்!..

மகேந்திரன்
சனி, 8 ஆகஸ்ட் 2026 (12:44 IST)
ஈரான் அணு ஆயுத நாடாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை துவங்கியது. ஆனால், அமெரிக்காவின் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. அதாவது அமெரிக்காவால் ஈரானை அடிபணிய வைக்க முடியவில்லை.

ஈரானும் திருப்பி தாக்க துவங்கியது. குறிப்பாக அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. அதேபோல் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரினையை ஈரான் மூடியது. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.. தற்போது வரை போர் நின்ற பாடில்லை.

ஒருபக்கம் இந்த போர் துவங்கிய இரண்டாவது நாளிலேயே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குடும்பத்தோடு கொல்லப்பட்டார். அந்த தாக்குதலில் கமேனியின் குடும்பத்தை சேர்ந்த 19 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் அவரின் மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அதேநேரம், அந்த தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்ததாக செய்திகள் வெளியானது. அந்த சம்பவத்திற்கு பின் கடந்த 5 மாதங்களாக மொஜ்தபா கமேனி வெளியேவரவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் ஈரான் இதுபற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் - சவுதி அரேபியா மோதல்!.. இண்டிகோ விமானம் ரத்து!...

ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்!.. தமிழன் பார்த்திபன் அறிவிப்பு...

அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேற தயாராக உள்ளனர்.. செங்கோட்டையன்

நத்திங் போன்களுக்கு புதிய 'நத்திங் ஓஎஸ் 5.0' இயங்குதளம்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

5 ரூபாய் கரண்ட்டை 35 ரூபாய்க்கு வாங்கலாமா?.. தவெக அரசுக்கு எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments