Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி இப்படிப்பட்ட பண்டிகையா? நியூயார்க் மேயர் எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (08:25 IST)
இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் விடுமுறை அளிக்க நியூயார்க் மேயர் முடிவு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடும் தீபாவளியின் மேல் நியூயார்க் மேயருக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் மாகாணத்திலும் ஏராளமான இந்திய மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் அடுத்த ஆண்டு முதல் நியூயார்க் பள்ளிகளில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “தீபாவளி மற்றும் தீப ஒளி திருநாள் என்றால் என்ன என்பதை சமீபத்தில்தான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த நடவடிக்கை அனைத்து குழந்தைகளும் தீபாவளியை பற்றி அறிய உதவும். உங்களுக்கு உள்ள ஒளியை எவ்வாறு இயக்குவது என அது கற்றுத்தரும்” என கூறியுள்ளார்.

Edited by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments