Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு படத்தை பார்த்தால் சிறை; விற்றால் மரணம்! – பகீர் கிளப்பும் வட கொரியா!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (09:13 IST)
வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பார்ப்பவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் அன்னின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அங்கு நிலவுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து உலக நாடுகளை பீதியில் ஆழ்த்திய வடகொரியா, உலகமே கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்றும் கூறி வந்தது.

இவ்வாறாக உலக தகவல் தொடர்பிலிருந்து அப்பால் இருந்து வரும் வடகொரியாவில் படம் பார்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு திரைப்பட சிடிக்களை வடகொரியாவில் விற்று வந்த நபர் ஒருவரை வடகொரிய அரசு தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வெளிநாட்டு திரைப்படங்களை வடகொரியாவில் தடை செய்துள்ளதாகவும், அதை பார்ப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments