அமெரிக்காவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டு, மறுபக்கம் ஜப்பானை கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகளை ஏவி வருகிறதாம் வடகொரியா.
ஏவுகணை சோதனைகளை கவிடுவதாக வட கொரியா - அமெரிக்கா மத்தியில் இதுவரை இரண்டு முறை பேச்சுவார்த்தைகள் நடந்து உள்ளது. இதில் கடந்து முறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்புகளை உறுதி செய்துள்ளது வடகொரியா - அமெரிக்கா அரசுகள்.
ஆம், இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை மீண்டும் வடகொர்யா - அமெரிக்கா இடையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என இரு நாட்டு தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வடகொரியா அரசு ஒரு பக்கம் பேச்சுவார்த்தை மறுபக்கம் ஏவுகணை சோதனை என டபுள் கேம் ஆடி வருகிறது.
வடகொரியாவின் வான்சன் நகரில் இருந்து ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டு வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வடகொரியா ஏவுகணைகளை ஏவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளுக்கு மத்தியில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.