Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ட்விட்டரில் பதிவிட்டால் பணம்..? எலான் மஸ்க் கவர்ச்சிகர அறிவிப்பு!

Elon mUsk
Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:13 IST)
யூட்யூப் போல இனி ட்விட்டரில் வீடியோ பதிவுகளுக்கு பதிவிடுபவர்களுக்கு பணம் அளிக்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.



உலகம் முழுவதும் சாமானியர் முதல் பிரபலங்கள் வரை பலரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் ட்விட்டர். இதை சமீபத்தில் உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதுமுதல் ட்விட்டர் பயனாளர்களுக்கு சதா இம்சை தந்து வருகிறார். அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் வெரிபிகேசனை ப்ளூ, க்ரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் வசூலிக்க ஆரம்பித்தார், ட்விட்டர் பணியாளர்கள் பலரை வேலை விட்டு நீக்கினார்.

இதனால் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறி வரும் நிலையில் பயனாளர்களை தக்க வைக்க எலான் மஸ்க் புதிய ஐடியாவை அமல்படுத்தியுள்ளார். அதன்படி இனி யூட்யூப் போல ட்விட்டரிலும் பதிவிடும் வீடியோக்களுக்கு பயனாளர்களுக்கு பணம் கொடுக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளது. யூட்யூப் போல ட்விட்டரிலும் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரம் இடம்பெறும்.

ஆனால் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு பணம் பெற வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. அந்த கணக்கு ப்ளூ டிக் வெரிபிகேசன் பெற்றிருக்க வேண்டும். 500 ஃபாலோவர்களுக்கு மேல் இருக்க வேண்டும். கடந்த 3 மாதங்களுக்குள் 1.5 கோடி இம்பெரஷன்களை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments