Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’188 பேர் ’பலியான இந்தோனேஷிய லயன்ஸ் விமானம் பற்றிய உண்மை தகவல்...

Advertiesment
இந்தோனேஷியா
, புதன், 28 நவம்பர் 2018 (13:55 IST)
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தோனேஷியாவில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு 188 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது பற்றிய தகவல்கள் விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. 
இந்தோனேஷியா
போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்த இந்த லயன்ஸ் விமானம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி 188 பயணிகளுடன் புறப்பட்டு வானில் பறந்த சில நிமிடங்களிலேயே தன் கட்டுப்பாட்டை  இழந்து பின் கடலில் விழுந்துள்ளது.
இந்தோனேஷியா
இதில் பயணித்த 188 பயணிகளும் இறந்ததாக செய்திகள்  வெளியான நிலையில் உலகம் முழுக்க இச்சோகம் பெரிதும் பரவலாக பேசப்பட்டது. 
 
இது நடந்து முடிந்த பிறகு விமானத்தின் உயிராக விளங்கும் கருப்புப் பெட்டி தேடும் வேலைகள் விரைவாக நடந்து வந்த நிலையில் ஒருவழியாக இந்தக் கருப்புப் பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். 
இந்தோனேஷியா
அதன் பின் லயன்ஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது எனபது பற்றிய தகவலை வெளியிட்டு இந்தோனேஷியா நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
 
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.
 
விமானத்தின் பாதுகாப்பு முறை செயலிழந்து விமானத்தின் முகப்பு பகுதியானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி ஈர்த்துள்ளது. விமானி எவ்வளவோ முயற்சி செய்து மேலே பறக்க வைக்க முயற்சி செய்தும் கூட விமானம் கடலில் மூழ்கியுள்ளது என்று இதில் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியா
ஆயினும் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப் படாமல் எப்படி போயிங் ரக விமானத்தை இயக்க சம்மதித்தார்கள் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் மேலும் விசாரித்துவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருகி உருகி காதலித்த ஜோடி: பெற்றோரின் எதிர்ப்பால் செய்த வேலை