Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளே ஆஃப் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கிய சி எஸ் கே… புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (19:27 IST)
இன்று சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்துமுடிந்தது. இந்த போட்டிதான் சி எஸ் கே அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியாகும். அதனால் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் குவிந்துள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன் படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஆரம்பம் முதல் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். அந்த அணியின் ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கும், பட்லர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ரன்ரேட் அதலபாதாளத்துக்கு சென்றது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் முடிவி 5 விக்கெட்கள் இழுப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அந்த இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டிப்பிடித்து தங்கள் ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் சி எஸ் கே அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சி எஸ் கேவின் இந்த வெற்றியால் ஆர் சி பி, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ ஆகிய அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments