Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட்டுக்கு ஏன் அடிக்கடி ஓய்வு… கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி ஓய்வு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:11 IST)
டிராவிட் அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்வதை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி அடுத்து உடனடியாக நியுசிலாந்துக்கு சென்று அங்கு 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் தற்காலிகமாக இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி பேசியுள்ள ரவி சாஸ்திரி “நான் ஓய்வுகளில் நம்பிக்கைக் கொண்டவன் இல்லை. நான் எனது அணியைப் புரிந்து கொள்ள விரும்புவதால், எனது வீரர்களைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன், பின்னர் அந்த அணியை கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறேன். உங்களுக்கு எதற்கு பல இடைவெளிகள் தேவை? உங்களின் ஓய்வை  2-3 மாத ஐபிஎல்-ன் போது பெறுவீர்கள், பயிற்சியாளராக நீங்கள் ஓய்வெடுக்க இது போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் யாராக இருந்தாலும், அவர் தயாராக இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments