Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது தெரியுமா....?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (13:07 IST)
அமாவாசைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான்.  மா என்றால் மிகப்பெரியது என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.


நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன் போல பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.

நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களு ம் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திரு ப்பதாக நம்பிக்கை.  இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிட த்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் தோஷங்கள் நீங்கி நமது தலைமுறையும் செழிக்கும். புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். கூடவே தானமும் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடை ந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி காரியங்கள் நடந்து முடியும்!– இன்றைய ராசி பலன்கள்(11.11.2024)!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(10.11.2024)!

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்.. விரதத்தை முடித்த முருகன் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments