Publish Date: Wed, 19 Oct 2022 (09:23 IST)
Updated Date: Wed, 19 Oct 2022 (09:25 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென 400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 210 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 17551 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் காணும் நிலையில் இருப்பதாகவும் முதலீட்டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்