Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. லாபத்தை அதிகளவில் புக் செய்கிறார்களா?

Siva
வியாழன், 15 மே 2025 (10:02 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் உயர்ந்ததால், அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் உச்சத்தை அடைந்தது. இதனை அடுத்து, லாபத்தை புக் செய்ய முதலீட்டாளர்கள் தொடங்கியதால்,   நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்குச்சந்தை சரிந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து, 80,923 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 119 புள்ளிகள் சரிந்து, 24,459 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
டைட்டான், டிசிஎஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments