Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

Siva
ஞாயிறு, 25 மே 2025 (08:03 IST)
இளமையில் வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தும் சில குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி ஒரு புத்திசாலி சிறுமி தான் கேரளாவைச் சேர்ந்த ஶ்ரீலட்சுமி சுரேஷ்.
 
1998 பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்த ஶ்ரீலட்சுமி, மூன்று வயதில் கணினி பயன்படுத்த தொடங்கி, ஆறாம் வயதில் தனது முதல் இணையதளத்தை வடிவமைத்தார். 11வது வயதில் eDesign Technologies என்ற இணைய வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கி உலகின் மிகவும் இளையான CEOகளில் ஒருவராக விளங்கினார்.
 
8ஆம் வயதில் தனது பள்ளிக்காக இணையதளம் வடிவமைத்து தனது திறமையை நிரூபித்தார். இவர் நிறுவனம் SEO, கிராபிக் டிசைன், இணையதள மேம்பாடு உள்ளிட்ட சேவைகள் வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட், நோக்கியா, கோகா-கோலா போன்ற பெரிய நிறுவனங்களும் இவரது கிளையண்டுகளாக உள்ளனர்.
 
 ஶ்ரீலட்சுமி கோழிக்கோட்டில் உள்ள பிரெசென்டேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்து, பின்னர் சென்ட் ஜோசப் கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது eDesign Technologies நிறுவனத்தின் CEO ஆக செயல்பட்டு வருகிறார்.
 
இணைய வடிவமைப்பில் தன்னுடைய சிறப்பான சேவைக்காக 2008 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் விருதும், Golden Web Award (USA), Sixty Plus Education Award (Canada) போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஊடக  இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.51 கோடி என்று கூறப்படுகிறது. அடுத்த தலைமுறையினருக்கு இவரது வாழ்க்கை ஒரு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments