Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” – கூகிள் மேப் பார்த்து வெள்ளத்தில் சிக்கிய கார்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (08:38 IST)
ஓசூரில் கூகிள் மேப் பார்த்து காரில் சென்று தவறுதலாக வெள்ளத்தில் குடும்பம் ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக தென்மேற்கு பருவமழையால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழக – கர்நாடக எல்லை பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் ஓசூர் வழியாக பேகேப்பள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சார்ஜாபூரை சேர்ந்த ராகேஷ் என்பவர் குடும்பத்துடன் ஓசூர் வந்துள்ளார். நள்ளிரவில் அவர்கள் திரும்ப சார்ஜாபூர் புறப்பட்ட நிலையில் கூகிள் மேப் வழிகாட்டலின் பேரில் காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளனர்.

கூகிள் மேப் பேகேப்பள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும்படி காட்டியதால் காரை தரைபாலம் நோக்கி செலுத்தி ராகேஷ் குடும்பத்துடன் வெள்ளத்தில் சிக்கினார். உடனடியாக வெள்ளத்தின் அதிக நீரோட்ட பகுதிக்கு செல்லும் முன்னதாக காரை நிறுத்திய ராகேஷ் தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டுள்ளார்.

சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்ட் சென்று காரில் இருந்த 4 பேரையும் மீட்டனர். பின்னர் காரையும் மீட்டனர். கூகிள் மேப்பை நம்பி குடும்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

இதுக்குதான் பொய்யை பரப்பினார்களா? சரிந்த ரஃபேல் பங்குகள்! சீன போர் விமான பங்குகள் உயர்வு!

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா.. இந்தியா பதிலடி..!

எதிர்பார்த்தது போலவே தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் 400 ரூபாய் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments