Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா குவாட்டர் கட்டிங், ரெட் ஜெயிண்ட் மூவிஸ்.. திமுக வேஷத்தை வெட்ட வெளிச்சமாக்கிய நமது அம்மா!!

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (09:38 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா, தமிழில் கோஷம் என்பது தலையாய வேஷம் என திமுகவை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
திமுக எம்பிக்கள் பதவியேற்பு விழாவின் போது தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து அதிமுக எம்பி ரவீந்திரந்நாத்தும் புரட்சி தலைவர் வாழ்க, புரட்சி தலைவி வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டார். 
 
ரவிந்திரநாத் ஜெய்ஹிந்த் என்று சொன்னதை, இந்தி என்ற குறுகிய வட்டத்தில் திமுக அதனை கொச்சைப்படுத்தியதாக கூறி திமுகவை விமர்சித்து நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில உங்கள் பார்வைக்கு...
வா குவாட்டர் கட்டிங், ரெட் ஜெயிண்ட் மூவிஸ், கிளவுட் நைன், தி ரைசிங் சன் என்றெல்லாம் வெள்ளைக்கார மொழியில் படம் எடுத்து பத்திரிக்கையும் நடத்தும் வெள்ளைக்கார கம்பெனி எதோ ஒட்டுமொத்த தமிழுக்கு ஒப்பந்ததாரர்கள் போல் ஊளையிடுகிறது.
 
ஏதோ இவர்கள்தான் முதன் முதலில் தமிழில் பதவியேற்று உறுதி மொழி மேற்கொண்ட புரட்சியாளர்கள் போல... புரட்சி தலைவி ஜெயலலிதா தனது 40 வயதில் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில்தான் பதிவயேற்றார் என்பதை நாடறியும். 
திமுக எம்பிக்கள் தமிழ் வாழ்க என்று கோஷிமிட்டுவிட்டு கையெழுத்து போட்டதோ ஆங்கிலத்தில் என்பதுதான் கூடுதல் தகவல். இனம், மொழி, நதி, மாநில உரிமை ஆகியவற்றில் அதிமுக இம்மி அளவும் விட்டுக் கொடுக்காது. அதேநேரத்தில் இந்திய தேசியத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒன்றுபட்டு தொண்டாற்றுவதில் கடுகளவும் தவறாது.
 
தமிழ் பற்றாளர்கள் எனும் வேஷம் போடும் மு.க.ஸ்டாலினின் மகள் நடத்தும் பள்ளியில் இந்திக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் மறைக்க முடியாதே என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments