Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (08:41 IST)
தமிழகத்தில் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் யூகலிப்டஸ் மரங்களை நட தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் அந்நிய மரங்களை அகற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அந்நிய மரங்களை அகற்றுவது குறித்த நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அறிக்கை சமர்பித்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் அனைத்து அந்நிய மரங்களும் அகற்றப்படும் என விளக்கம் அளித்தது. ஆனால் 10 ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என கூறியுள்ள நீதிமன்றம், அந்நிய மரங்களை அகற்ற முடிவெடுத்துள்ள அரசு எதற்காக யூகலிப்டஸ் மரங்களை நடுகிறது என கேல்வி எழுப்பியுள்ளது.

மேலும் தமிழக அரசு இனி யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக இல்லை என்றும், மரங்களை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments