Publish Date: Sat, 26 Sep 2026 (16:30 IST)
Updated Date: Sat, 26 Sep 2026 (16:33 IST)
கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக பொதுச்செயலாளரும் விருதாச்சலம் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்தும், மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் விதம் குறித்தும் அவர் கருத்துகளைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்டவர், மக்களுக்காக வாழ்ந்தவர் கேப்டன். ஆனால் அவருக்கெல்லாம் மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. யாரோ ஏமாற்றுபவர்கள், பொய் சொல்பவர்கள், நடிப்பவர்களுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், மக்கள் தங்களுக்காக பணியாற்றிய தலைவர்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
....
மேலும் படிக்க