Publish Date: Tue, 31 Jan 2023 (13:34 IST)
Updated Date: Tue, 31 Jan 2023 (13:35 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்பதும் இதற்காக மின்சார அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில் சற்று முன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து தெரிவித்துள்ளார்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதை அடுத்து 15 நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.