Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வில் குளறுபடி''-அன்புமணி ராமதாஸ்

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (15:09 IST)
தமிழகத்தில், இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளதாக பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும்.

போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை

சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments