Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரே சதம், கோஹ்லி அரைசதம்: வலுவான நிலையில் இந்திய அணி

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (07:02 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரே மற்றும் கேப்டன் கோஹ்லி களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் புஜாரே அபார சதமடித்தார். அவர் 294 பந்துகளில் 103 ரன்கள் அடுத்து அபாரமாக விளையாடி வருகிறார். அதேபோல் கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதத்தை பூர்த்தி செய்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். 182 பந்துகளில் 69 ரன்கள் எடுத்துள்ள கோஹ்லி இன்னும் சில நிமிடங்களில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  சற்றுமுன் வரை இந்திய அணி 117 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது

நேற்றைய முதல் நாளில் தொடக்க வீரராக களமிறங்கிய மயாங்க் அகர்வால் 76 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments