மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘மாமன்னன்’ படங்களை மிஸ் செய்துவிட்டேன் – அனுபமா வருத்தம்!

vinoth
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (14:56 IST)
வாழை படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் முடிந்து தற்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் அளித்த ஒரு நேர்காணலில் மாரி செல்வராஜின் முந்தைய இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றி பேசியுள்ளார். அதில் “மாரி செல்வராஜ் முதலில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையை என்னிடம்தான் சொன்னார். ஆனால் அப்போது நான் தெலுங்கு படங்கள் சிலவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டதால் நடிக்க முடியவில்லை. அதே போல ‘மாமன்னன்’ பட வாய்ப்பும் மிஸ்ஸானது. ஆனால் இப்போது ‘பைசன்’ படத்தில் அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் வாய்ப்பை இழந்ததற்காக நான் வருத்தப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments