Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆஸ்கருக்காக 80 கோடி ரூபாய் செலவு செய்ததா RRR படக்குழு?

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (14:38 IST)
பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.  இந்நிலையில் இன்று நடந்த ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் விருதை வென்றுள்ளது.

விருதைப் பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் மரகதமணி “ஆர் ஆர் ஆர் படக்குழுவையும், இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்து பேசினார்” மேலும் இது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை என்றும் பேசினார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் மேடையில் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த பாடலுக்கான விருதை பெறுவதற்காக RRR படக்குழு சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கிட்டத்தட்ட 6 மாதங்களாக அங்கு தங்கி படத்தை ப்ரமோட் செய்து, பல்வேறு ஊடகங்களில் படம் பற்றிய செய்திகளை வரவைத்து என 80 கோடி ரூபாய் அளவுக்கு படக்குழு செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments