Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

Siva
ஞாயிறு, 4 மே 2025 (19:07 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டு அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய நடிகைகளை பாலியல் அடிமை ஆக்குவோம் என்று பாகிஸ்தான் யூடியூபர் ஒருவர்  கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் யூடியூபரிடம் பேட்டி எடுத்தபோது போர் நடந்தால் உங்களுடைய ஆசை என்ன என்று கேட்டார்.
 
அப்போது அதற்கு அந்த யூடியூபர் போர் நடந்து அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய நடிகைகள் எங்கள் பாலியல் அடிமையாக வருவார்கள் என்றும், அதற்கு அனுமதி உள்ளதா என தெரியவில்லை ஆனால் அது நடந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் எனது ஆசை ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பாகிஸ்தானியர்களும் வீரராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாலிவுட் திரை உலகில் உள்ள யாரும் இதனை கண்டிக்கவில்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்