ஐரோப்பிய நாடுகளுடன் போர்!.. ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!...

BALA
புதன், 3 டிசம்பர் 2025 (11:09 IST)
ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கடுமையான போர் நடந்து வருகிறது. இதில் உக்ரைன் கடுமையான பாதிப்படைந்திருக்கிறது. பல மக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே இந்த போரை முடிவுக்கு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதற்காக 28 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கி இருக்கிறார்.

ஏனெனில் உக்ரை - ரஷ்ய போரால் சர்வதேச அளவில் பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த போரை நிறுத்த பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்து வருகிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர ட்ரம்ப் அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில்தான் ரஷ்ய் அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளுடன் போரிடுவோம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

‘ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரை தொடங்கினால் நாங்களும் போரிட தயார்.. சமாதான பேச்சுவார்த்தை நடத்த கூட யாரும் இல்லாதபடி ஐரோப்பிய நாடுகள் ஒரு முழுமையான தோல்வி சந்திக்கும்’ என அவர் எச்சரித்திருக்கிறார்.

டிரம்ப்பின் 28 அம்ச உக்ரைன் அமைதி திட்டத்தை சில ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுக்கிறது. இதுதான் ரஷ்ய அதிபர் புதினை கோபப்படுத்தியிருக்கிறது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை 2வது நாளாக இன்று இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி...!

இம்ரான்கானை சந்தித்தேன், ஆனால்.. சகோதரி செய்தியாளர்களிடம் பேட்டி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம்.. அதிகாலையில் பக்தர்கள் கரகோஷம்..!

நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.. மீண்டும் 2 லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை..!

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments