Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்: உக்ரைன் அதிபர் வேதனை

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (13:03 IST)
ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி பேட்டி. 

 
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். இன்று இரண்டாவது நாளாக போர் தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் ரஷ்ய மக்களுக்கு நன்றி. ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம். 
 
மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது. சொன்ன வாக்குறுதியை மீறி குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய சீர்குலைவு கும்பல்கள் புகுந்துவிட்டன.
 
ரஷ்ய சீர்குலைவு குழுக்கள் குறித்து உக்ரைன் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments