நமது முப்படைகளின் ஆயுத பலம்!
- ஆர். சித்தார்த்தன்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்ட இந்தியாவின் ஆற்றல் மகத்தானது. சுமார் 13,25,000 வீரர்களுடன் இயங்கிவரும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
சுமார் 852 போர் விமானங்கள், 63 அணு ஆயுத ஏவுகணைகள், 32 போர்க் கப்பல்கள், 19 நீர் மூழ்கிகளுடன் தெற்கு ஆசியாவின் பலமான ராணுவத்தைப் பெற்றுள்ளது இந்தியா. நமது நாட்டின் குடியரசு நாளன்று நமது பாதுகாப்பு படைகளின் பலத்தை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் ராணுவ வலிமை!
ஒட்டு மொத்தப் படை பலம் 13,25,000
பணியில் உள்ளவர்கள் 13,25,000
தேசியப் பாதுகாப்புப் படை, மற்றவை வி.இ*
கூடுதல் படைகள் 11,55,000
துணை நிலை ராணுவம் 12,93,300
தரைப்படை, பாதுகாப்புப் படைகளின் வலிமை!
மொத்தபலம் 11,00,000
பணியில் உள்ளவர்கள் 11,00,000
கூடுதல் 9,60,000
யுத்த பீரங்கிகள் 3,978
AIFV/Lt. பீரங்கி (ஏவுகணை ஏந்தி) 1,900
APC பீரங்கி 817
தானியங்கி ஆர்ட்டிலெறி 150
சாதாரண ஆர்டடிலெறி 5,625
மார்ட்டார் 6,720
எம்.ஆர்.எல். வாகனம் 180
எஸ்.எஸ்.எம் எறிகணை செலுத்திகள் வி.இ.*
சிறியரக எஸ்.ஏ.எம். ஏவுகணை செலுத்தி 3,500
சிறியரக ஏ.ஏ. எறிகணை செலுத்தி 2,339
விமானப் படை வலிமை!
ஒட்டு மொத்த படை பலம் 1,70,000
யுத்த குண்டுவீச்சு
விமானங்கள் 852
சண்டை விமானம் (தரைவழித் தாக்கு) 380
சண்டை விமானம் 386
போக்குவரத்து விமானம் 288
எரிபொருள் நிரப்பு விமானம் 6
ஹெலிகாப்டர் 296
ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் 60
எஸ்.எஸ்.எம் எறிகணை செலுத்தி வி.இ.
சிறியரக எஸ்.ஏ.எம். எறிகணை செலுத்தி வி.இ.
கப்பற் படை வலிமை!
ஒட்டு மொத்த படை பலம் 55,000
முக்கியமான தரையிலக்குப் போர்க் கருவிகள்
விமான தாங்கிக் கப்பல் 1
நீர்மூழ்கிக் கப்பல் 19
நடுத்தர வகை ஆயுதக் கப்பல் 28
ஆயுதக் கப்பல் 8
அதிவேகச் சுற்றுக்காவல் படகு 10
டோர்பெடோ குண்டு செலுத்தி 6
வழிகாட்டி- அழிக்கும் ஏவுகணை 8
ஆயுதக் கப்பல்- வழிகாட்டி ஏவுகணை 9
பிற ஏவுகணை 8
கண்ணி வெடி அகற்றல் கப்பல் 18
நீரிலும் நிலத்திலும் செல்லும் கப்பல் 7
படகுதாங்கிக் கப்பல் 10
உதவிக் கப்பல் 32
கடற்படை விமானப்படை வீரர்கள் 7,000
கடற்படை விமானம் 34
குண்டுவீச்சு விமானம் ---
கடலோரக் கண்காணிப்பு விமானம் 15
ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டர் 34
ASW ஹெலிகாப்டர் 17
SAR ஹெலிகாப்டர் 6
பிற ஹெலிகாப்டர் 51
* விவரம் இல்லை
ராணுவச் செலவினங்கள்
கடந்த மத்திய நிதி நிலை அறிக்கையில் 2007-08 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவினங்களுக்கு ரூ.96,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவத்திற்கு மட்டும் 47 விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும், ஒட்டு மொத்த வளர்ச்சியில் (GDP)பாதுகாப்புச் செலவினங்களின்(DE) பங்கு 2.07 விழுக்காடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் விழுக்காட்டைப் பொறுத்து பாதுகாப்புச் செலவின விவரம் வருமாறு ( India’s DE as % of GDP)
தேசியப் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி வழங்கிய பரிந்துரைப்படி மேற்கண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்