Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்து கோவிலில் பக்தர்களை தாக்கிய காலிஸ்தான் கும்பல்! - கனடா பிரதமர் கண்டனம்!

Canada Khalistan attack

Prasanth Karthick

, திங்கள், 4 நவம்பர் 2024 (10:07 IST)

கனடாவில் இந்து கோவில் ஒன்றில் காலிஸ்தான் கும்பல், பக்தர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கனடாவில் புலம்பெயர்ந்த சீக்கிய மக்கள் பலர் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களிடையே காலிஸ்தான் அமைப்பின் தாக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகாசபை கோவிலுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய சென்றுள்ளனர்.

 

அப்போது அப்பகுதியில் இருந்து கொண்டு இந்து பக்தர்களை மறித்த காலிஸ்தான் அமைப்பினர் சிலர் அவர்களை குச்சியால் அடித்து விரட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

இந்த சம்பவம் குறித்து காலிஸ்தான் அமைப்பினரை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “மத வழிபாட்டு தலங்களில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனட பிரஜைக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக பின்பற்ற உரிமை உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள்: ஆய்வு செய்த ஐகோர்ட் நீதிபதி..!