Publish Date: Sun, 27 Sep 2026 (13:21 IST)
Updated Date: Sun, 27 Sep 2026 (13:25 IST)
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சில் எப்போதும் ஒரு நக்கலும், நையாண்டியும் இருக்கும். அதேபோல் சில சமயம் ஆபாசமாக இரட்டை அர்த்தத்திலும் உதயநிதி பேசுவதுண்டு.
ஆனால், அதை திமுகவினர் ரசிப்பார்கள் என்றாலும் பொதுமக்களை பொறுத்தவரை உதயநிதி பேசுவது முகம் சுழிக்கும் வகையில்தான் இருக்கிறது. திமுகவினரை பொறுத்தவரை ஆபாசமாக பேசுவதை பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார்கள். அது இயல்பான ஒன்று என அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் பல வருடங்களாகவே அப்படித்தான் பேசி வருகிறோம் என்ன திமுகவே கூறுகிறது..
சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் இரட்டை அர்த்தத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விஷமாக பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது வழக்குப் பதிவு அவரை வேனில் தஞ்சாவூர் வரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் மாறவில்லை. சமீபத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடை தேர்தலில் பிரச்சாரம் செய்த உதயநிதி மீண்டும் இரட்டை அர்த்தத்தில் பேசினார். அதாவது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முதல்வர் விஜய் ஆசைப்படுகிறார். கடலை பார்த்துக்கொண்டே வேலை செய்தால்தான் அவருக்கு மூடு வரும் என்று பேசியிருந்தார்..
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார் ‘உதயநிதி தனது மனதில் இருக்கும் அனைத்து ஆபாசங்களையும் ஒவ்வொரு நாளும் விரக்தியின் உச்சத்தில் வெளிப்படுத்துகிறார். உதயநிதி மனதில் உள்ள ஆபாசத்தை மாற்ற முடியுமா? உதயநிதி மாதிரியான நபரை நம்பி அந்த கட்சியில் பெண்கள் பயணிக்க முடியுமா? உதயநிதி பகலிலே நிதானம் இல்லாமல் பேசுகிறார்.. தயவுசெய்து அவர் பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.. உதயநிதி கடைசிவரை கத்துக்குட்டிதான்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க